தமிழகத்தில் அதிகரிக்கும் மூளைச் சாவு - அதிர்ச்சி ரிப்போர்ட்

brain-death-rate-increases-in-tamil-nadu-in-every-year

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன என்ற செய்தியினை சமீப காலமாக அடிக்கடி பார்க்க முடிகிறது.  


Advertisement

அது சரி, மூளைச்சாவு என்பது என்ன?

விபத்து அல்லது கட்டி என மூளையில் ஏற்படும் பாதிப்பு காரணமாக மூளைத்தண்டுவடம் நிரந்தரமாக செயல் இழந்துவிடும் நிலையையே மூளைச் சாவு என்கிறோம். மூளைச் சாவு அடைந்தவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிப்பதன் காரணமாக, இதயம் சிறிது நேரம் செயல்படும். மூளைச் சாவு என்பதும் கிட்டத்தட்ட மரணத்தைப் போன்றதுதான். 


Advertisement

நமது மூளைத்தண்டுவடம் பகுதியில்தான் உள்ள மெடுலா ஆப்லங்கேட்டா, 2 செமீ அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும். இதயத்துடிப்பும், மூச்சு விடுதலும் சீராக இயங்க, இந்த மெடுலா ஆப்லங்கேட்டா தான் காரணம். மூளைத்தண்டுவடத்தில் கட்டி ஏற்பட்டாலோ, மெடுலா ஆப்லங்கேட்டாவில் அடிபட்டாலோ, சில சமயம் மூளை உடனடியாகச் செயல் இழந்துவிடும். 

அப்படி மூளைச் சாவு அடைந்தவர்களின் இதயமும் சில நிமிடங்களில் செயல் இழக்கும். அதே சமயம், மூளைச்சாவு அடைந்தவர்களுக்கு விரைவாக செயற்கை முறையில் ஆக்சிஜன் கருவியைப் பொருத்தினால், இதயத் துடிப்பு மேலும் சில மணி நேரங்களுக்கு சீராக இயங்கும். அதாவது சராசரியாக 12 முதல் 24 மணி நேரம் வரை இதயம் இயங்க வாய்ப்புள்ளது. அரிதாக ஒரு சிலருக்கு மட்டுமே ஒரு வாரம் வரைகூட இதயத்துடிப்பு இருக்கும். ஆனால், செயற்கை ஆக்சிஜனை எடுத்துவிட்டால், இதயத்துடிப்பு நின்றுவிடும். 


Advertisement

இந்நிலையில்தான், மூளைச் சாவு அடைந்த நோயாளியின் குடும்பத்தினரின் அனுமதி பெற்று, சீராக இயங்கும் மற்ற உறுப்புக்களைத் தானமாகப் பெற்று மற்றவர்களுக்குப் பொருத்தப்படுகிறது.

அதிகரிக்கும் மூளைச் சாவு?

தமிழகம் முழுவதிலும் மூளைச் சாவு அடைபவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரம்மாவிற்கு ஆர்.டி.ஐ மூலம் இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளன. 2008-09 ஆம் ஆண்டில் மூளைச் சாவு அடைந்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 21 ஆக இருந்தது.  அது ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக உயர்ந்து கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 171 ஆக  உயர்ந்துள்ளது.

மூளைச் சாவு விவரம்( ஆண்டுவாரியாக)

2008-09 - 21 பேர் 

2009-10 - 61 பேர் 

2010-11 - 94 பேர் 

2011- 12 - 72 பேர் 

2012-13 - 76 பேர் 

2013-14 - 141  பேர்

2014-15 - 155 பேர் 

2015 -16 - 156 பேர் 

2016- 17 - 171 பேர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement