ஜார்ஜ் குற்றச்சாட்டிற்கு எஸ்.பி ஜெயக்குமார் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.


Advertisement

குட்கா புகாரில் சிபிஐ சோதனைக்கு ஆளான சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குட்கா ஊழல் நடந்தபோது மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பணியாற்றிய ஜெயக்குமார், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். 

தற்போது விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவரும் ஜெயக்குமார், இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு விளக்கமளித்துள்ளார். பழிவாங்கும் நோக்கத்துடன் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஜார்ஜ் கூறியிருப்பதாக ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். உண்மை எதுவென்பது நிரூபிக்க வேண்டிய இடத்தில் நிரூபிக்கப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement