இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆதார் விண்ணப்பத்தின் விபரங்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டதற்கு அவரது மனைவி சாக்ஷி மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாதிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மகேந்திர சிங் தோனி ஆதார் அட்டை பெற பதிவு செய்தபோது எடுத்த புகைப்படங்களை சிஎஸ்சி இ-கவர்னன்ஸ் என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டனர். அது மட்டுமல்லாமல், அவரது ஆதார் விண்ணப்பத்தின் புகைப்படங்களும் பதிவிடப்பட்டது. இதற்கு மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி தோனி கடும் கோபத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
தோனி ஆதார் அட்டைக்காக தன் கைரேகைகளை பதிவு செய்யும் போட்டோவை ட்விட் செய்த மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாதிற்கு ட்விட்டரில் பதிலளித்த சாக்ஷி, தோனியின் ஆதார் விண்ணப்பத்தின் புகைப்படங்களை வெளியிட்டது கண்டனத்திற்கு உரியது என்றும் தனியுரிமை மீறல் என்று தெரிவித்தார். தனி மனித சுதந்திரத்தில் இன்னும் எதேனும் மிச்சம் உள்ளதா என்றும் சாக்ஷி கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆதார் விண்ணப்ப விவரங்களை வெளியிட்டது சட்டத்திற்கு புறம்பானது என்றும் இப்பிரச்னை குறித்து விசாரிக்கப்படும் என்று ட்விட்டரில் கூறினார். இதையடுத்து, தோனியின் ஆதார் விண்ணப்ப விவரங்களை வெளியிட்டதற்காக ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை ஆணையம் (யு.ஐ.டி.ஏ.) சிஎஸ்சி இ-கவர்னன்ஸ் நிறுவனத்தை தடை செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
Loading More post
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்
5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!