போராட்டத்தை கைவிட வேண்டும்: விவசாயிகளுக்கு தம்பிதுரை கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தார்.


Advertisement

வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 15-ஆது நாளாக தொடர்ந்து கொண்டு வருகிறது. கையில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை ஏந்தி இன்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று சந்தித்து பேசினார். விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, விவசாயிகள் குறைகள் தொடர்பாக கடந்த வாரமே நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தேன். அவர் இதுகுறித்து ஆவண செய்வதாக கூறினார்.


Advertisement

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் தானும், வேளாண்மைத் துறை அமைச்ரும் இங்கு வந்துள்ளோம். நிதியமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். விவசாயிகளின் போராட்டம் நியாயமானது. இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். மத்திய அரசுக்கு விவசாயிகள் குறைகள் தொடர்பாக அழுத்தம் கொடுப்போம் என கூறினார். மத்திய அரசு வழங்கியுள்ளள நிவாரணத் தொகை யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றது எனவும் கூறினார். தமிழக அரசு விவசாயிகளின் போராட்டதை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement