கேரளாவில் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கச்சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அம்மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
கனமழை மற்றும் வெள்ளத்தில் கடுமையான பாதிப்புக்கு உள்ளான கேரள மாநிலம் மெல்ல மீண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சீமான் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள், கேரளாவின் கோட்டயம் மாவட்டத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டன. வாகனங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படம் பொறித்த பதாகைகள் இருந்ததால், நிவாரணப் பொருட்களை வழங்க சங்கனாசேரி முகாமில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதனால் அங்கு சலசலப்பு எழுந்ததையடுத்து சீமான் மற்றும் உடன் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். கோட்டயம் காவல்நிலையத்தில் நடந்த பல மணிநேர விசாரணைக்கு பின்னர் சீமான் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில் முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க காவல்துறையினர் அனுமதி வழங்கினர். கேரள காவல்துறையினரால் விடுவிக்கப்பட்ட சீமான் தமிழகம் திரும்பினார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!