ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறுமி: ஆய்வாளர் பரிசுடன் பாராட்டு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த 5 வயது சிறுமி ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


Advertisement

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சாமுவேல்ராஜ் - ராதா தம்பதியினரின் 5 வயது மகள் லக்சன்யா ராஜ். முன்னீர் பள்ளத்திலுள்ள முத்தமிழ் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். மாணவி லக்சன்யா ராஜ் கடந்த ஒரு ஆண்டாக போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் ஹெல்மெட் அணிவது குறித்த  விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். அத்துடன் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு பரிசும் வழங்கி வருகிறார்.


Advertisement

இந்நிலையில் இன்று பாளையிலுள்ள நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாணவி லக்சன்யா ராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது பாளையங்கோட்டை  காவல்நிலைய ஆய்வாளர் ராமையா லக்சன்யா ராஜை அழைத்து பாராட்டி அவருக்கும் பரிசும் வழங்கினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement