டெல்லியில் தமிழக அமைச்சர்: போராடும் விவசாயிகளை சந்திக்கிறார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் போராடும் விவசாயிகளை தமிழ‌க வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு இன்று சந்தித்து பேசுகிறார்.


Advertisement

வறட்சி நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும். பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 15-ஆவது நாளாக இன்றும் தமிழக விவசாயிகள் தங்களது போராட்டங்களை தொடர்கின்றனர். மகாத்மா காந்தியின் புகைப்படத்தை கைகளில் ஏந்தி அவர்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு இன்று சந்தித்து பேசவுள்ளார். இதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார். மேலும் விவசாயிகள் மத்திய அமைச்சரை சந்திக்க துரைக்கண்ணு ஏற்பாடு செய்யவார் எனவும் கூறப்படுகிறது.மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் டெல்லியில் விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவினை தெரிவிக்க உள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement