JUST IN

Advertisement

இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா நடிகர் சூர்யா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என நடிகர் சூர்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சூர்யா இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலத்தில் இருப்பது போன்ற வீடியோ வெளியானது. இதனால் சூர்யா மதம் மாறிவிட்டதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் சூர்யா தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “இணையதளங்களில் வைரலாகப் பரவிய அந்த வீடியோ, கடந்த 2013-ஆம் ஆண்டு படப்பிடிப்பிற்காக ஆந்திர மாநிலம் கடப்பா சென்றபோது எடுக்கப்பட்டது. இசையமைப்பாளர் ஏஆர். ரகுமானின் தாயார் கேட்டுக்கொண்டதால், கடப்பாவில் உள்ள அமீர் பீர் தர்காவுக்கு சென்றதாகவும், அப்போது சில வழிபாடுகள் நடைபெற்றதாகவும் சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது”.

மேலும், இதை தவறாகப் புரிந்துகொண்ட சிலர், இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக செய்தி பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌சூர்யா இஸ்லாம் மதம் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், எனினும் அவர் அந்த மதத்திற்கு மாறவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement