கேரளாவில் வெள்ள பாதிப்புகளால் அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவிகித அளவுக்கு குறையும் என கணிப்பு வெளியாகியுள்ளது. கேர் ரேட்டிங்ஸ் நிறுவனம் இம்மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
சுற்றுலா, விருந்தோம்பல், தோட்டப்பயிர் துறைகளில் பெரும் பாதிப்பு இருக்கும் என்றும் கொச்சி பகுதி தொழிற்சாலைகள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என்றும் அக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலைகள் அரித்துச் செல்லப்பட்டதால் 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பும் கொச்சி விமான நிலைய பாதிப்பால் 40 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை பாதிக்கப்படும் என அக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கேரளாவின் ஒட்டுமொத்த வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் 60%, ஓணம் சமயத்தில் மட்டும் நடப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர முற்றிலும் இடிந்த மற்றும் சேதமடைந்த வீடுகளை கட்டவும் சீரமைக்கவும் 50 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை செலவாக வாய்ப்பிருப்பதாகவும் கேர் ரேட்டிங்ஸ் கணித்துள்ளது.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!