ஆவடியில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவில் சிறுவர் விளையாட்டு திடல் மேல் மின் வயர்கள் மிக தாழ்வாக செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சென்னை ஆவடி பெருநகராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு செந்தில் நகர் பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் சுமார் 37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன பூங்கா கடந்த மாதம் இறுதியில் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பூங்காவின் நடுவே இரண்டு மின் கம்பங்களை இணைக்கும் வயர் மிக தாழ்வாக செல்வதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடனே அப்பூங்காவினை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சிறுவர்கள் பயன்படுத்தும் விளையாட்டு உபகரணங்கள் மேலே செல்வதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பூங்காவிற்கு அனுப்பவே தயங்குகின்றனர். மின் வயர்கள் மிகவும் தாழ்வாக செல்வதால் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் அங்கு விளையாடி கொண்டிருக்கும் சிறுவர்கள் மற்றும் நடைபயிற்சி செல்பவர்கள் மீது மின்சாரம் தாக்குமோ என்ற அபாயம் உள்ளது.
இச்சூழலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் ஆவடி நகராட்சி நிர்வாகம் உடனடியாக அந்த மின் இணைப்பை மாற்றி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்தை உணராமல் சிறுவர்கள் ஆனந்தமாய் விளையாடி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆவடியில் ஒரு பூங்காவில் மின்சாரம் தாக்கி மாடு ஒன்று பலியானதால் பொதுமக்கள் மேலும் அச்சத்தில் உள்ளனர்.
Loading More post
சட்டப்பேரவைத் தேர்தல்: சமத்துவ மக்கள் கட்சி - ஐஜேகே கூட்டணி அமைத்து போட்டி
மீண்டும் ஒரு 2011... வாக்குப்பதிவு முடிந்து கிட்டத்தட்ட 1 மாதத்திற்குப் பின் ரிசல்ட்!
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'