‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்’ - பரப்புரையை தொடங்கிவைத்த முதலமைச்சர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற மாநில அளவிலான விழிப்புணர்வு பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.


Advertisement

தமிழகத்தில் வரும் 2019ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகத்தை உருவாக்குவது தொடர்பான மாநில அளவிலான விழிப்புணர்வு பரப்புரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழிப்புணர்வு குறும்படம் ஒன்றையும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து, பிளாஸ்டிக் மாசு தொடர்பான இணையதளத்தையும், செயலியையும் அவர் தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இனி அரசு கோப்புகள் கூட காகித கோப்புகளாக தான் இருக்கும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான விளம்பரத் தூதர்களாக நடிகர்கள் விவேக், சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

Read Also -> ஸ்டெர்லைட் கழிவுகள் - ஆற்றில் இருந்து அகற்ற உத்தரவு 

loading...
Related Tags : CM PalanisamyPlasticTamilnaduAwarenessSuryaJhothikaKarthiVivek

Advertisement

Advertisement

Advertisement