சென்னையின் அடையாளமாக விளங்கும் முக்கிய கட்டடங்களின் வரலாறு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை தினம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் மனதில் நிற்கும் சென்னையின் சில முக்கிய கட்டடங்களின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்.


Advertisement

ரயில் மூலம் சென்னை வந்தாலோ அல்லது சென்னையை நினைத்தாலோ சட்டென நம் கண்முன் வந்து நிற்கும் சிவப்பு நிறக் கட்டடம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரை வந்த தமிழ்த் திரைப்படங்களில் சென்னை என்ற நகரத்தை காட்சியாக அடையாளப்படுத்த சென்ட்ரல் ரயில் நிலையக் கட்டடத்தையும் அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டடத்தையும் காட்சியாக காட்டுவதே வழக்கமாக இருந்தது. சென்னையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் இந்த 2 கட்டடங்களின் காட்சிகளும் இடம்பெறவில்லை என்றால் அந்த படம் வெற்றி பெறாது என்ற கருத்து கோடம்பாக்கம் வட்டாரத்தில் நிலவியது உண்டு. இந்த புகழ்மிக்க கட்டடத்தை 1873-ஆம் ஆண்டு ஜார்ஜ் ஹார்டிங் என்பவர் வடிவமைத்தார்.


Advertisement

இந்த வரிசையில் இரண்டாவதாக உள்ளது சென்னை அண்ணாசாலையில் 1959-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்ட எல்.ஐ.சி கட்டடம். இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இந்தியாவிலேயே இதுதான் மிக உயரமான கட்டடமாக இருந்தது. காப்பீட்டு நிறுவனங்களை தனியார் நடத்தி வந்த காலத்தில் அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கட்டடத்தை உந்துதலாக கொண்டு லண்டனில் இருந்து ஆர்க்கிடெக்டுகளை வரவழைத்து இக்கட்டத்தின் கட்டுமானப்பணியை 1953-இல் தொடங்கினார் தொழிலதிபர் சிதம்பரம் செட்டியார். இந்த நிலையில் 1956-ஆம் ஆண்டு காப்பீட்டு நிறுவனங்களை அன்றைய பிரதமர் நேரு தேசியமயமாக்கியதன் விளைவால் இக்கட்டடம் நாட்டுடமை ஆக்கப்பட்டது. இந்த கட்டடத்தை அன்றைய நிதியமைச்சர் மொராஜிதேசாய் திறந்து வைத்தார். சென்னை மாநகர் முழுவதையும் நம் கண்முன் நிறுத்தும் இந்த கட்டடத்தின் உயரமே இதன் பிரம்மிக்க வைக்கும் பேரதிசயம்.


Advertisement

இந்த வரிசையில் மூன்றாவதாக உள்ளது உலகின் மிகப்பெரிய நீதிமன்ற வளாகத்தை கொண்ட நீதிமன்றங்களின் ஒன்றான சென்னை உயர்நீதிமன்றக் கட்டடம். இந்தோ-சார்சனிக் முறையில் 1888-ஆம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடம் 1892-ஆம் ஆண்டு ஹென்றி இர்வின் என்பவரின் வழிகாட்டுதலால் கட்டி முடிக்கப்பட்டது. அழகிய வர்ணம் தீட்டப்பட இக் கட்டத்தின் கோபுரங்களும், வண்ணக் கண்ணாடிகள் கொண்ட கதவுகளும் இக்கட்டத்தில் அழகை மேலும் மெருகேற்றுகின்றன. கடல் மட்டத்தில் இருந்து 175அடி உயரத்தில் உள்ள இந்த மாட கோபுரத்தில்தான் சென்னையின் முதல் கலங்கரை விளக்கம் செயல்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. இந்த கட்டத்தை அன்றைய கால கட்டத்தில் ரூபாய் 9.45 லட்சம் செலவில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் கட்டுமானம் முழுமை பெற 12 லட்சத்து 98ஆயிரத்து 163 ரூபாய் செலவானது.

நான்காவதாக கூவம் நதிக்கரைக்கு அருகே இருக்கும் ராஜாஜி மண்டபம். 1799-இல் ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானை வென்றதை குறிக்கும் வகையிலும் 1757-இல் நடந்த பிளாசி போரில் ராபர்ட் கிளைவ் பெற்ற வெற்றியை குறிக்கும் வகையிலும் அவரது மகன் எட்வர்ட் கிளைவ் ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்க நினைத்தார். அதன்படி டென்மார்க்கை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் கோல்டிங் ஊராம் கிரேக்கர்களின் கோயிலான பார்த்தனான் கட்டடத்தை அடிப்படையாக கொண்டு உயர்ந்த படிக்கட்டுகடுகளும் பெரும்தூண்களான கட்டடத்தை கட்டி முடித்தார். BANQUET HALL என்ற பெயரில் ஆங்கிலேய ஆளுநர்களின் விருந்து மண்டபமாக செயல்பட்ட இந்த கட்டிதத்திற்கு 1948ஆம் ஆண்டு ராஜாஜி ஹால் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு பிறகு கருத்தரங்கங்கள் மற்றும் பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்பும் இங்கு நடந்துள்ளது. முன்னாள் முதல்வர்கள் காமராசர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் மறைந்தபோது பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர்களது உடல்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தன என்பது நினைவுகூறத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement