கமலின் மகாபாரத பேச்சுக்குறித்து, அவர் மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நடக்கும் ஐஃபா விருது விழாவில் கலந்து கொள்ள வந்த அக்ஷரா, புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், அப்பா எதையும் ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசுபவர். வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் இது போன்ற சம்பவங்கள் நிறைய இருக்கு. அவர் மேல் எழும் சர்ச்சை குறித்து அவரிடம் கேட்பதும், அதற்கு அவர் பதில் சொல்வது தான் சரியாக இருக்கும்’ என்றார்.
அஜீத்துடன் நடித்துவரும் விவேகம் படம் பற்றிய கேள்விக்கு, ‘ இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். அஜீத்துடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இதில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறேனா இல்லையா என்பது பற்றி இப்போது சொல்ல இயலாது’என்றார். அடுத்து அவர் நடிக்கும் இந்தி படித்தில் இளம் கர்ப்பிணியாக நடிப்பது பற்றி கேட்டதற்கு, ‘இது சவாலான கேரக்டர். மனதளவில் சில விஷயங்களில் நம் நாடு முன்னேற வேண்டும். அதற்கான விழிப்புணர்வாக இந்த படம் இருக்கும் என்பதால் நடிக்க சம்மதித்தேன்’ என்ற அக்ஷரா, ஐஃபா விழாவில் முதல் முறையாக மேடையில் நடனம் ஆடுகிறார்.
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?