புதிய தலைமுறை உதவி மையத்தில் குவியும் நிவாரணப் பொருள்கள் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவை புதியதலைமுறை மையத்தில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் ஹெலிகாப்டர் மூலமாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


Advertisement

கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், உடைகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இன்று ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் திருச்சூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காளப்பட்டி பகுதியிலுள்ள ஜஸ்ட் ஃபிளை ஏவியேஷன் என்ற தனியார் நிறுவன ஹெலிகாப்டர் மூலம் திருச்சூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து கடுமையாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Aslo -> கேரளாவுக்கு ஐக்கிய அரபு ரூ.700 கோடி நிதி ! 


Advertisement

Read Also -> நிறைமாத கர்ப்பிணியை ஹெலிகாப்டரில் ஏற்றியது எப்படி? கடற்படை கமாண்டர் விளக்கம்

 


Advertisement

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தலைமுறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் பொதுமக்கள் தொடர்ந்து நிவாரணப் பொருட்களை ஆர்வத்துடன் அளித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாள்களில் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை தமிழக மக்கள் வழங்கியுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement