நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவிற்கு நிதியுதவி

Actress-keerthi-suresh-donates-Rs-15-Lakh-to-Flood-affected-Kerala

கேரள வெள்ள நிவாரணத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் ரூபாய் 15 லட்சம் வழங்கியுள்ளார்.


Advertisement

கேரளாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 361 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.  பலர் தங்களது வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர். கடும் சேதத்தை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல தரப்பில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்டு வருகின்றன. பெருமழை மற்றும் வெள்ளத்தால் 8 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.


Advertisement

இந்நிலையில் கேரள வெள்ள நிவாரணத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் 15 லட்சம் வழங்கியுள்ளார். முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து அதற்கான காசோலையை கீழ்த்தி சுரேஷ் வழங்கியுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு பல சினிமா நடிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே கமல்ஹாசன் மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒன்றும் இணைந்து 50 லட்சம் ரூபாயை கேரளா மாநிலத்திற்கு தருவதாக அறிவித்துள்ளனர். அதேபோல் கேரள முதல்வரின் நிவாரணநிதிக்கு நடிகர் சூர்யாவும் கார்த்தியும் இணைந்து ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளனர். அது தவிர நடிகர் விஜய் சேதுபதி கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். நடிகர் விக்ரம் 35 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக கேரளாவிற்கு அளித்துள்ளார். அதேபோல நடிகர் பிரபு மற்றும் விக்ரம் பிரபு இணைந்து கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 10 லட்சத்தை வழங்கியுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement