கேரள சேதத்தை அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவிப்பு

Kerala-Flood-as-calamity-of-Severe-Nature

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதத்தை அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


Advertisement

இடைவிடாத மழை, வெள்ளம், நிலச்சரிவு என இயற்கை சீற்றத்திற்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கேரளா. இதுவரை 361 பேர்கள் உயிரிழந்துள்ளனர். 40 பேர்கள் காணாமல் போய் உள்ளனர். 87 பேர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் தங்களது வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்து நிர்கதியாய் நிற்கின்றனர். எனவே கடும் சேதத்தை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல மாநிலங்களில் இருந்தும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களால் முடிந்த பணத்தையோ, உணவுப் பொருட்களையோ வழங்கி வருகின்றனர்.


Advertisement

இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதம் அதிதீவிர இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கேரள மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கடந்த சனிக்கிழமை ஆய்வு செய்தார். இதனையடுத்து உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 500 கோடி ரூபாய் வழங்கப்படும் என அவர் அறிவித்திருந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement