மெட்ரோவில் வேலை வாங்கித்தருவதாக 10 லட்சம் மோசடி

Chennai-Metro-Rail-Job---Rs-10-5-Lakhs-cheated

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.10.5 லட்சம் பெற்று ஏ‌மாற்றி‌யதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.


Advertisement

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக மதுரை வீரன் மற்றும் ந‌டத்துநராக அர்ஜூனன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மீது அரக்கோணத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்‌. அதில்‌ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாளர் வேலை வாங்கித் தருவதாகக்கூறி, ரூ.10.5 லட்சம் பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக‌‌‌ கூறியிருந்தார். 

‌‌இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மதுரை வீரன் மற்றும் அர்ஜூனன் ஆகியோரை கைது செய்தனர். இருவரும்‌‌ அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் என‌ விசாரணைக்குப் பிறகு காவல்துறையினர் தெரிவித்தனர்‌. இந்த வழக்கில் மோசடி தொடர்புடைய ‌அஜீஸ், ஜாகிர் உசேன் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்‌றனர்.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement