செங்கன்னூரில் இருப்பவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று அப்பகுதி எம்எல்ஏ செரியன் கண்ணீருடன் கோரிக்கை விடுத்த நிலையில் போர்கால அடிப்படையில் அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நூற்றாண்டு காணா மழை வெள்ளத்தால் தத்தளிக்கிறது கேரளா. வரலாறு காணாத பெரு மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் செங்கன்னூரில் சுமார் 50 ஆயிரம் பேர் சிக்கி இருப்பதாகவும் உடனடியாக அவர்களை மீட்க வேண்டும் என்றும் அப்பகுதி எம்எல்ஏ செரியன் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் கேரளாவின் செங்கன்னூர் பகுதியில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கு ராணுவத்தை அனுப்பி இருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். செங்கன்னூரில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ள பினராயி விஜயன், 4 ஹெலிகாப்டர்கள், 5 ராணுவப்படகுகள் மற்றும் 65 மீன்பிடி படகுகள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தலா 100 வீரர்கள் கொண்ட 4 ராணுவ குழுக்கள் செங்கன்னூருக்கு சென்றிருப்பதாகவும், ஹெலிகாப்டர்கர்கள் மூலம் அங்கு சிக்கி இருக்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் பினராயி விஜயன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?