JUST IN

Advertisement

முல்லைப் பெரியாறு அணையில் விரிசலா?: பாதுகாப்பாக இருப்பதாக விளக்கம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முல்லைப் பெரியார் அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி வதந்தி என்றும், அது முற்றிலும் ஆதாரமற்றது என கேரள அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

இதுகுறித்து அம்மாநில அரசின் செயலாளர் டிங்கு பிஸ்வால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் முல்லைப் பெரியார் அணையில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என செய்தி பரவுவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த செய்தி வெறும் வதந்தி என்றும், முற்றிலும் ஆதராமற்றது எனக் கூறியுள்ள அவர், அணை பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்துள்ளார்.


Advertisement

இவ்வாறு வதந்தி பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் என்றும், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement