ஆல் ரவுண்டர்னா ஸ்டோக்ஸ் மாதிரி இருக்கணும்: ஹர்திக் பாண்ட்யாவை விளாசும், தமிழ் சிங்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’ஆல்ரவுண்டர் என்றால் இங்கிலாந்து அணியில் உள்ள பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் மாதிரி இருக்க வேண்டும்’ என்று ஹர்திக் பாண்ட் யாவை சாடினார் ஹர்பஜன் சிங்.


Advertisement

இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி யைத் தழுவிய இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாளை விளையாடுகிறது. முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவியதால் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது இந்திய அணி. இந்நிலையில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளரும் ’சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியில் இணைந்ததை அடுத்து தமிழில் ட்வீட் போட்டு தமிழ் சிங் என வர்ணிக்கப்பட்ட, ஹர்பஜன் சிங்கும் இந்திய அணியை விமர்சித்து ள்ளார். 


Advertisement

Also Read -> நாளை 3 வது டெஸ்ட்: இந்திய அணியில் அதிரடி மாற்றம்! 

அவர், பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படாத ஹர்திக் பாண்ட்யாவை கடுமையாகச் சாடியுள்ளார். அவரை கபில்தேவுடன் ஒப்பிடுவதையும் எதிர்த்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறும்போது, ‘ ஹர்திக் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படவில்லை. அவரது பந்துவீச்சிலும் கேப்டன் திருப்தி அடையவில்லை. இரண்டிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இங்கிலாந்து போன்ற நாடுகளி ல் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றால் எதிர்காலத்தில் அவர் அணியில் நீடிப்பது கடினம். 


Advertisement

Also Read -> சூதாட்டப் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை!

ஆல் ரவுண்டர்கள் என்றால், இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரன் ஆகியோர் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் செயல்படுவதைப் போல் பாண்டியா செயல்பட்டிருக்க வேண்டும். அவரிடம் எதிர்பார்ப்பதும் அதைத்தான். பிறகு ஏன் அவருக்கு ஆல் ரவுண்டர் பட்டம்? அதை அவரிடம் இருந்து நீக்கி விடுங்கள். அவரை லெஜண்ட் கபில்தேவுடனும் ஒப்பிட வேண்டாம். ஒருநாள் இரவில் கபில்தேவின் இடத்தை பிடித்து விட முடியாது’ என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement