கேரள முதல்வரை சந்தித்த கார்த்தி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று சந்தித்த நடிகர் கார்த்தி, வெள்ள நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.


Advertisement

கேரளாவில் கடந்த சில நாட்களாக, வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநி லத்தின் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன. மழை வெள்ளம் காரணமாக சுமார் 80 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 


Advertisement

இந்நிலையில் கேரள முதல்வரின் நிவாரணநிதிக்கு நடிகர் சூர்யாவும் கார்த்தியும் இணைந்து ரூ.25 லட்சத்தை வழங்குவதாக அறிவித்திருந்த னர். அதன்படி, கேரள முதல் பினராயி விஜயனை இன்று நேரில் சந்தித்த நடிகர் கார்த்தி ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அவருடன் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜசேகரப் பாண்டியன் இருந்தார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement