கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

திமுக தலைவர் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த கடந்த 8ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்திருந்தார். ராஜாஜி ஹாலுக்குள் அவர் வந்த போது, கூட்ட‌நெரிசலில் சிக்கினார். இந்த நிலையில் ராகுலுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து, ராகுல் காந்தி பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

இறுதி அஞ்சலி ‌நிகழ்வில் கூட்ட நெ‌ரிசலில் சிக்கி ‌உயிரிழந்தவர்களின்‌ குடும்பங்க‌ளுக்கு தலா ரூ.20 ‌லட்சம் இ‌ழப்பீடு வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய மாநில அரசுகளின் உள்துறை செயலாளர்கள் 4 வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.‌ இழப்பீடு கோரிக்கை குறித்து தமிழக அரசு பதில் அளிக்கவும் ஆ‌‌ணையிட்டனர். வழக்கு விசாரணை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது‌.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement