வால்பாறையில் வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் புகுந்த நீர்: மக்கள் தவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாழை தோட்டம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.


Advertisement

Aslo Read:  கேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு


Advertisement

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. வால்பாறையில் உள்ள குளங்கள், நடுமலை, சின்னக்கள்ளார் போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சோலையார் அணை, சின்னக்கள்ளார் அணை, நீரார் அணைகளில் தண்ணீர் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.  மூன்று நாள்களாக  கனமழை பெய்து வருவதால், நேற்று இரவு வால்பாறை  நடுமலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

Also Read:  கன்னியாகுமரியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்: மக்கள் அவதி


Advertisement

இந்நிலையில் வாழை தோட்டம் குடியிருப்பு பகுதி மற்றும் போக்குவரத்து பணிமனை பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. போக்குவரத்து பணிமனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பணிமனையை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் தவித்தனர். பின் தீயணைப்பு துறையினர் மூலம் அவர்களை மீட்டனர். வாழை தோட்டம் குடியிருப்பு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.  வீட்டில் இருந்த சிலர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். சிலர் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருந்தனர். அவர்கள் காவல் துறையினர் உதவியுடன் மீட்டனர். வீடுகளை இழந்த பொதுமக்களுக்கு தங்குவதற்கு அரசு பள்ளிகள் மற்றும் தனியார் மண்டபங்கள் தயார் நிலையில் உள்ளது .
 

loading...

Advertisement

Advertisement

Advertisement