[X] Close >

சைகை காட்டி ரயிலை நிறுத்திய பொதுமக்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு

Public-stopped-train--Accident-avoided

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் அவ்வழியாகச் சென்ற ரயிலை பொதுமக்கள் சைகை காட்டி நிறுத்தியதில் அதிர்ஷ்ட வசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் திங்கள்சந்தை அருகே இரணியல் ரயில் தண்டவாளத்தில் திடீரென பக்கவாட்டுச் சுவர் உடைந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டது. அதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சைகை காட்டி ரயிலை தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Advertisement

தகவலறிந்த ரயில்வே துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவு காரணமாக நாகர்கோவில் திருவனந்தபுரம் ரயில் தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close