வாழத் தகுதியான நகரங்கள் - சென்னைக்கு எத்தனையாவது இடம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வாழத் தகுதியான நகரங்கள் பட்டியலில் தமிழக அளவில் திருச்சி முதலிடத்தை பிடித்துள்ளது. 


Advertisement

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்களை தேசியளவில் ஆய்வு நடத்தியுள்ளது. நகர்ப்புற போக்குவரத்து, கழிவு நீர் மேலாண்மை, மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் தரநிலைகளை நிர்ணயித்து 78 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. 


இந்த ஆய்வின் முடிவில் இந்தியாவில் வாழத் தகுதியான நகரங்களில் மஹாராஷ்டிராவின் புனே நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் நவி மும்பை, கிரேட்டர் மும்பை, திருப்பதி (ஆந்திரா), சண்டிகர் (ஹரியானா), தானா (மஹாராஷ்டிரா), ராய்பூர் (சட்டீஸ்கர்) இந்தோர் (மத்திய பிரதேசம்), விஜயவாடா (ஆந்திரா), போபால் (மத்திய பிரதேசம்) ஆகியவை அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றுள்ளது. மேலும் தமிநாட்டில் எந்த ஒரு நகரமும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை.  


Advertisement

ஆனால் இந்த பட்டியலில் 12 வது இடத்தை தமிழகத்தின் திருச்சி கைப்பற்றியுள்ளது. மேலும் சென்னை 14 இடத்தையும் கோயம்புத்தூர் 25 வது இடத்தையும் பெற்றுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement