இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் போடப்படாமல் முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இரண்டாவது நாள் போட்டித் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 107 ரன்களுக்கு சுருண்டது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட் டுகளை சாய்த்தார். இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வோக்ஸ், பேர்ஸ்டோவ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். பேர்ஸ்டோவ் 93 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். வோக் ஸ் 137 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 289 ரன்கள் பின் தங்கிய நிலையில் விளையாடிய இந்திய அணியில் முரளி விஜய் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 10, புஜாரா 17, ரகானே 13, விராத் கோலி 17, தினேஷ் கார்த்திக் 0 என தொடர்ந்து வருவதும் போவதுமாக இந்திய வீரர்கள் இருந் தனர். இதனால், இந்திய அணி 66 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து, ஹர்திக் பாண்ட்யா - அஸ்வின் ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடியது. இருவரும் மாறி, மாறி பவுண்டரிகளை அடித்தனர். நிதானமாக விளையாடிய பாண்ட்யா 26 ரன்னில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த குல்தீப் யாதவும் ஷமியும் டக் அவுட் ஆயினர். இஷாந்த் சர்மா 2 ரன்னில் நடையை கட்ட, இந்திய அணி 130 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் பிராட் 4, ஆண்டர்சன் தலா 4 விக்கெட்கள் சாய்த்தனர். வோக்ஸ் 2 விக்கெட் எடுத்தார். இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. வோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டாவது தோல்வியை தழுவியது. 3-வது போட்டி 18- ஆம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
தோல்விக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ‘எங்கள் வீரர்கள் விளையாடிய விதம் பெருமைக்குரியதாக இல்லை. இதை கொண்டு பெருமைகொள்ள முடியாது. கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் முழுமையாக வீழ்த்தப்பட்ட போட்டி இது தான். இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் விளையாடிய விதம், வெற்றிக்கு தகுதியானவர்கள்தான் என்பதைக் காட்டியது. சும்மா உட்கார்ந்துகொண்டு சீதோஷ்ண நிலையை குறைசொல்ல விரும்பவில்லை. அதை பற்றி நினைக்கவும் இல்லை. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். அடுத்தப் போட்டியில் எங்கள் தவறுகளை சரிசெய்ய வாய்ப்பிருக்கிறது. எனது முதுகுவலி பற்றி கேட்கிறார்கள். அடுத்த போட்டிக்கு இன்னும் 5 நாட்கள் இருக்கிறது. அதற்குள் சரியாகிவிடுவேன் என நினைக்கிறேன்’ என்றார்.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறும்போது, ‘முதல் பந்தில் இருந்தே எங்கள் ஆட்டம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டார்கள். பேர்ஸ்டோவும் வோக்ஸும் நிலைத்து நின்று சிறந்த பார்ட்னர்ஷிப் கொடுத்தார்கள். வோக்ஸ் எப்போது வந்தாலும் தனது திறமையை நிரூபித்துவிடுகிறார். அவர்கள் விளையாடிய விதம் அருமையாக இருக்கிறது. இருந்தாலும் சில ஏரியாவில் நாங்கள் முன்னேற வேண்டும். அடுத்தப் போட்டியில் அதை சரிசெய்துவிடுவோம்’ என்றார்.
Loading More post
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
தமிழகத்தில் பேருந்து வேலைநிறுத்தம்: மிகக்குறைவான பேருந்துகள் இயக்கம் -பயணிகள் அவதி
பிரதமர் மோடி இன்று தமிழகம், புதுச்சேரி வருகை
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!