இந்தி படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியாக, துல்கர் சல்மான் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் மம்மூட்டியின் மகனும் மலையாள ஹீரோவுமான துல்கர் சல்மான், தமிழில் ’வாயை மூடி பேசவும்’, ’ஓ காதல் கண்மணி’, ’சோலோ’, ’நடிகையர் திலகம்’ படங்களில் நடித்துள்ளார். இவர், இர்பான் கான், மிதிலா பால்கருடன் இந்தியில் நடித்த ’கன்வார்’ படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இதையடுத்து மீண்டும் இந்திப் படம் ஒன்றில் அவர் நடிக்க இருக்கிறார்.
‘த ஸோயா ஃபேக்டர்’ என்ற இந்தப் படம், எழுத்தாளர் அனுஜா சவுகான் இதே பெயரில் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவாகிறது. அபி ஷேக் சர்மா இதை இயக்குகிறார். இவர் ஏற்கனவே, ’தேரே பின்லேடன்’, ’த ஷாக்கீன்ஸ்’, ’தேரே பின் லேடன்: டெட் ஆர் அலைவ்’, ‘பர்மனு: த ஸ்டோரி ஆப் பொக்ரான்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் துல்கர் சல்மான், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹீரோயினாக சோனம் கபூர் நடிக்கிறார்.
Loading More post
கொரோனா அச்சம்: கோயம்பேடு சந்தையில் சிறு கடைகள் சுழற்சி முறையில் செயல்படும் என அறிவிப்பு
சூரப்பா மீதான விசாரணை 80% நிறைவு - ஆணையம்
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 கொரோனாகால நிதி - அரசாணை வெளியீடு
பீகார்: உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாகக்கூறி இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட அவலம்
சில்லறை கேட்டு முதியவரை தாக்கும் நடத்துனர்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ