மாறியது கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்க புரோபைல்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக தலைவர் கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்க புரோபைல் படம் மாற்றப்பட்டுள்ளது.


Advertisement

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது  உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து இன்றும் ஏராளமானோர் கருணாநிதி நினைவிடம் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.


Advertisement

இந்நிலையில் கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்க புரோபைல் படம் இன்று மாற்றப்பட்டுள்ளது. கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக சக்கர நாற்காலியைத்தான் பயன்படுத்தி வந்தார். தற்போது சக்கர நாற்காலியில் அவர் எப்போதும் பயன்படுத்தும் மஞ்சள் துண்டு, கண்ணாடி இருப்பது போன்ற புகைப்படம் அவரது ஃபேஸ்புக் புரோபைல் படமாக மாறியுள்ளது. இந்த புகைப்படத்தை பலரும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement