“கலைஞர் உடல் மெரினாவில்தான் அடக்கம் செய்யப்படும்” - வழக்கறிஞர் துரைசாமி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக தொடரப்பட்ட 5 வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார்.


Advertisement

மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்டதை எதிர்த்து காவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவரது உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கை அடங்கிய மனுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக தலைவர்கள் கொடுத்தனர்.

ஆனால், வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்ட சிக்கல்கள் உள்ளதாலும் மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்ததை அடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்க செய்வது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. 


Advertisement

இந்நிலையில், மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கோரி திமுக மனு தாக்கல் செய்துள்ளது.  உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுகவின் மனு அளித்துள்ளது. அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க இயலாது என தமிழக அரசு கூறியதை அடுத்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக தாக்கல் செய்த மனு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சென்னை கீரின்வேஸ் சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் துரைசாமி, “ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிராக நான் தாக்கல் செய்த 4 வழக்குகளையும் திரும்பப்பெறப் போகிறேன். மற்றொரு வழக்கும் திரும்பப்பெறப்படவுள்ளது. ஜெயலலிதா நினைவிடம் அமைந்திருப்பது கடலோர மண்டலப்பகுதி. ஆனால் அண்ணா சமாதி இருப்பது கடலோர மண்டலப்பகுதி இல்லை. அது கூவம் நதியின் கரைப்பகுதியாகும். அது மாநகாரட்சிக்கு உட்பட மயானப்பகுதி. மொத்தம் உள்ள 5 வழக்குகளும் இன்று திரும்பப்பெறப்படுவதால், அண்ணா நினைவிடத்திற்கு அருகே கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படும்” என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement