கருணாநிதி மறைவு - பிரதமர் மோடி, ராகுல் நாளை நேரில் அஞ்சலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி நாளை அஞ்சலி செலுத்துகின்றனர்.


Advertisement

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி கருணாநிதி உயிரிழந்தார். கருணாநிதி மறைவு குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். எவ்வளவு தீவிர சிகிச்சை அளித்தும் கருணாநிதியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு திமுக தொண்டர்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். 

இதனையடுத்து, மறைந்த கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 8 மணிக்கு அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கோபாலபுரம் இல்லத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கருணாநிதியின் உடல் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அதற்காக சென்னை ராஜாஜி ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.


Advertisement

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement