சிலைக் கடத்தல் வழக்கு: அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


Advertisement

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு கடந்த ஒன்றாம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு சிலைக் கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது சிபிஐ-க்கு மாற்றியது சட்டவிரோதம் என்று வாதிட்டார். அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் கும்பகோணம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை பொன்.மாணிக்கவேலே தொடர்ந்து விசாரிப்பார் என்று தெரிவித்தார். இதுவரை பொன்.மாணிக்கவேல் வழக்குப்பதிவு செய்யாத புகார்களையும், புதிய புகார்களையும் மட்டுமே சிபிஐ விசாரிக்கும் என்றும் அவர் கூறினார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் உள்ளதாகக்கூறி அதற்கு தடை விதித்தனர். மேலும் அரசாணை பிறப்பித்தது தொடர்பாக தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் கூடுதல் டி.ஜி.பி. ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர். தடையை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தால் அதை விசாரிக்க தயாராக இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தடையை எதிர்த்து தமிழக அரசு நாளை மனுத்தாக்கல் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement