சென்னை சாலையில் தாறுமாறாக ஓடிய கார்.. 2 பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் கார் மோதிய விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.


Advertisement

பட்டினப்பாக்கத்தில் நேற்று மாலை கார் ஒன்று சாலையில் தாறுமாறாக ஓடி முன்னாள் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. தொடர்ந்து 3 இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளிய கார் சரக்கு வாகனம் ஒன்றில் மோதி கடைசியாக நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


Advertisement

இந்த நிலையில் அமீர்ஜான் மற்றும் அபுதாஹிர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 4 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக துரைப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பென்ஸ் ரீகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement