வயல்காட்டுக்குள் சகதியில் நடனமாடிய தெலங்கானா இளைஞர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது.
கனடா நாட்டின் பாடகர் ஆப்ரே டிராக்கி கிரகாம் தமது ஸ்கார்பியன் என்ற இசை பாடல் தொகுப்பை வெளியிட்டார். இதில், 'இன் மை பீலிங்ஸ்' என்ற பாடலில் இரவு நேரத்தில் பிஸியான சாலையில் நடனமாடுகிறார் டிராக்கி. இந்தப் பாடல் பிரபலமானது. இதையடுத்து ’கிகி ஐ லவ்யூ’ என்ற பாடல் வரிகளை காரில் ஒலிக்கவிட்டு, கீழே இறங்கி நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் ஏறவேண்டும் என்கிற, கிகி சவால் பிரபலமானது.
இந்த மோகம் அமெரிக்கா, மலேசியா, ஸ்பெயின் என பல நாடுகளில் பரவியுள்ளது. தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித் துள்ளது. பிரபல நடிகை ரெஜினா ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த விவசாயிகள் வித்தியாசமான முறையில் கிகி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இரண்டு மாடுகள் உழுவதற்கு தயாராக உள்ள நிலையில் இருக்கிறது. லம்பாடிபள்ளி பகுதியைச் சேர்ந்த கீலா அனில் குமார் மற்றும் பில்லி திருப்பதி ஆகிய இரண்டு இளம் விவசாயிகள் அந்த மாடுகளை லேசாக தட்டிவிட அவை உழத் தொடங்குகின்றன. மாடுகள் உழும் போதே அவர்கள் அதனுடன் கிகி நடனமாடுகிறார்கள். அவர்கள் நடனமாடும் போது ஆடைகள் முழுவதும் சகதி ஆகிறது. இறுதியில் தனது வேஷ்டியையும் கழட்டி ஒரு விவசாயி நடனமாடுகிறார். சேரும், சகதியுமாக உள்ள நிலத்தில் அவர்கள் வித்தியாசமாக நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வீடியோ ஹிட்டானதால், பிறந்து 21 நாளே ஆன தனது மகனுக்கு கிகி என்று பெயர் வைத்திருக்கிறார் பில்லி திருப்பதி. இந்நிலையில் இந்த அனிலுக்கும் திருப்பதிக்கும் சில டிவி சேனல்கள் வேலை வாய்ப்பளிக்க முன் வந்துள்ளன. சில தயாரிப்பாளர்கள் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பளிக்கவும் முன் வந்துள்ளன. இதனால் இருவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?