ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் இரு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் 18 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாஸ்கோவில் இருந்து வடக்கு சைபீரியாவில் உள்ள எண்ணெய் வயலுக்கு 15 பயணிகள் மற்றும் 3 சிப்பந்திகளுடன் எம் ஐ - 8 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 18 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான மற்றொரு ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வானிலை சீராக இருந்த சமயத்தில் இந்த விபத்து நடந்திருப்பது, ரஷ்ய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Loading More post
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!