காரிமங்கலம் அருகே விவசாய கிணற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகன்கள் 4 பேரின் உடல்கள் கல்லால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இது கொலையா? தற்கொலையா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அடிலம் ஊராட்சிக்குட்பட்ட சவுளுகொட்டாய் கிராமத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், சென்னம்பட்டியை சேர்ந்த நதியா என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சஞ்சய்(12), பூவரசன்(8), நிர்மல்(6) ஆகிய 3 குழந்தைகள் உள்ளன. இதில் முதல் மகன் சஞ்சய் பிறப்பிலிருந்து கால்கள் நடக்க முடியாமல் இருந்துள்ளார்.
திருமணமான கொஞ்ச நாட்களில் கட்டிட தொழில் செய்து வந்த லோகநாதன், நாளடைவில் அந்த தொழிலை விட்டுவிட்டு, கிரைனட் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் நதியா அடிக்கடி தனது தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். கடந்த சில காலமாக லோகநாதன் சரியாக சம்பாதிக்காமலும் குடிப்பதற்காக மாற்று திறனாளி மகனுக்கு வழங்கப்படும் உதவித்தொகை பணத்தை மனைவியிடம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் கணவன் மனைவி இருவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நதியா 3 மகன்களை அழைத்து கொண்டு, கடந்த வியாழக் கிழமை தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து அன்று மாலையே நதியா தாய் வீட்டிலிருந்து திரும்பி வந்துள்ளார். ஆனால் அன்றிலிருந்து தாய் மகன்கள் 4 பேரும் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை. இதனால் 4 பேரையும் தாய் வீட்டார் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், வெள்ளிகிழமை காரிமங்கலம் காவல் நிலையத்தில் 4 பேரையும் காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை லோகநாதனுடைய விவசாய நிலத்தில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் ஒன்றாக வாய், கண் கட்டப்பட்ட நிலையில் மிதந்துள்ளது. இதனை கண்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு தீயணைப்பு துறையினர் இரண்டு சிறுவர்களின் உடலை மீட்டனர். அப்பொழுது சிறுவர்களின் உடல்கள் ஒன்றாக கல்லை கட்டிய நிலையில் இருந்துள்ளது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மற்ற இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு, நதியா மற்றும் இன்னொரு சிறுவன் இருவரது உடலும் ஒன்றாக கல்லுடன் கட்டப்பட்டு நிலையில் இருந்தது. சம்பவ இடத்தை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டி கங்காதர் நேரில் வந்து பார்வையிட்டார். இதனையடுத்து 4 பேரின் உடல்களை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே லோகநாதன் வேறோரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு, நதியாவை வரதட்சனை கேட்டு அடிக்கடி துன்புறுத்தி வந்ததாக நதியாவின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். எனவே லோகநாதன் தான் 4 பேரையும் அடித்து கொலை செய்து, கல்லை கட்டி கிணற்றில் விசியுள்ளார் என புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு லோகநாதனின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களும் உடந்தையாக இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து லோகநாதனிடம் காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Loading More post
பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தால் இ- பாஸ் கட்டாயம்
5 மாதங்கள்... 68 கட்டங்கள் : சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் - 1951
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!