சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அதிரடி மாற்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

சென்னை ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அரசுக்கு சாதகமாக சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் செயல்படலாம்; எனவே அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னைக்கு புதிய ஆணையர் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement