விராட், தவான் மைதானத்தில் போட்ட பங்க்ரா டான்ஸ் - வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா - எஸ்ஸெக்ஸ் அணிகளுடனான 3 நாட்கள் பயிற்சிப் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது இந்திய வீரர்கள் மைதானத்திற்கு வரிசையாக உள்ளே வந்தனர். அப்போது, இந்திய வீரர்களை வரவேற்க தோல் இசை வாத்தியம் இசைக்கப்பட்டது. போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற முடியாத வருத்தத்தில் ரசிகர்கள் இருந்த போதும், விராட், தவான் திடீரென நடனமாடி அசத்தினர். இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. இருவரும் பங்க்ரா நடனம் ஆடினர். விராட் கோலி ஆடியது குத்து டான்ஸ் போலவே இருந்தது. தவானும் கைகளை அழகாக அசைத்து நடனமாடினார்.


Advertisement

                 

இந்தப் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தவில்லை. இரு அணிகளும் சமமான அளவிலே பலத்துடன் விளையாடியது. ஒருவேளை இந்திய அணி எஸ்ஸெக்ஸ் அணியை குறைவான ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உற்சாகமாக இருந்திருக்கும். ஆனால், பந்துவீச்சு சிறப்பாக இல்லை. பேட்டிங்கும் பெரிய அளவில் எடுபடவில்லை. இந்த நிலையில், எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக விராட், தவான் நடனமாடியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.


Advertisement

                    

எஸ்ஸெக்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பிர்மிங்காம் மைதானத்தில் மோதுகிறது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement