இந்திப் படத்துக்காக அக்‌ஷய் குமாரை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வழங்கும் மராத்தி படம், ‘சும்பக்’ (Chumbak).  சந்தீப் மோடி இயக்கியுள்ள இந்தப் படத்தில் பிரபல மராத்தி பாடலாசிரியர் ஸ்வானந்த் கிர்கிரே, சஹில் ஜாதவ், சங்கரம் தேசாய் உட்பட பலர் நடித்துள்ளனர். 


Advertisement

மும்பை ஓட்டல் ஒன்றில் டேபிள் சுத்தம் செய்யும் 15 வயது பாலு என்கிற சிறுவனுக்கும் 45 வயதுக்காரருக்குமான நட்பை சொல்லும் கதையை கொண்டது இந்தப் படம். பல்வேறு விருதுகளை வென்றுள்ள இந்தப் படத்தை இந்தி சினிமா பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். 


Advertisement

இந்நிலையில் பிரத்யேகமாக இந்தப் படம் கடந்த புதன்கிழமை சில சினிமா பிரபலங்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதற்காக இயக்குனர் ஷங்கரை அழைத்திருந்தார் அக்‌ஷய்குமார். அதன்படி அங்கு சென்ற ஷங்கர், இந்தப் படத்தைப் பார்த்தார். அவருடன் ராஜ்குமார் ஹிரானி உட்பட சில முன்னணி இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் மராட்டி சினிமா துறையினர் படத்தைப் பார்த்தனர். பின்னர், இயக்குனர் ஷங்கர் அந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார்.

ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ படத்தில் அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement