அமெரிக்காவில் பிரம்மாண்டமாக ரிலீஸாகும் ‘விஸ்வரூபம்2’

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘விஸ்வரூபம்2’ திரைப்படம் அமெரிக்காவில் பிரம்மாண்டமாக ரிலீஸாக உள்ளது.


Advertisement

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ‘விஸ்வரூபம்’. இந்தப் படம் 2013ல் வெளியானது. பலத்த சர்ச்சைகளுக்கு இடையில் வெளியான இப்படம் பெரிய வெற்றியை ஈட்டியது. அதனை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தை கமல் எடுக்க தீர்மானித்தார். மேலும் முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்திற்கான காட்சிகளை படமாக்கி வைத்திருந்தார் கமல். ஆனாலும் பாகம் இரண்டு வெளியாவதில் சில காலதாமதங்கள் நிலவின. கமல்ஹாசனுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால் படம் வெளியாகுமா? என்ற சந்தேகம் பரவியது. 

இந்நிலையில் கமல்ஹாசன் படத்தை இயக்குவதில் மீண்டும் வேகம் காட்டினார். பல கட்ட படப்பிடிப்புகளுக்கு பிறகு ஆகஸ்ட் 10 அன்று ‘விஸ்வரூபம்2’ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தை அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக வெளியிட உள்ளனர். இந்தியாவில் வெளியாவதற்கு ஒருநாள் முன்பாகவே ஆகஸ்ட் 9ம் தேதி அன்று அமெரிக்காவில் வெளியாகிறது ‘விஸ்வரூபம்2’. இதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர், நாசர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement