வண்டலூர் பூங்காவில் 'ஜெயா' சிங்கக்குட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையை அடுத்த வண்டலூ‌ர் பூங்காவில் உள்ள 6 மாத பெண் சிங்கக்குட்டிக்கு ஜெயா என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார். 


Advertisement

வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் உள்ள பெண் சிங்கக்குட்டிக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜய பாஸ்கர், பெஞ்சமின், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பூங்காவில் உள்ள 6 மாத பெண் சிங்கக்குட்டிக்கு முதல்வர் ஜெயா என பெயர் சூட்டினார்.


Advertisement

அதேபோல், வண்டலூர் பூங்காவில் சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய சிறுவர் பூங்காவை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், புலிகளை பார்வையாளர்கள் சிறப்பான முறையில் பார்வையிட அமைக்கப்பட்டுள்ள கூடுதல் புலிகள் இருப்பிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.

 

                      


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement