’அண்ணன் - தம்பிங்க’: லண்டனில் பிராவோ பன்ச்!

Bravo-s-Dinner-With-His--Brothers--MS-Dhoni-And-Hardik-Pandya-In-London

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர், ட்வெயின் பிராவோ. இவர், ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி வருகிறார். 


Advertisement

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆனாலும் தோனி நேற்று சில சாதனைகளை செய்துள்ளார். 


Advertisement

ஒரு நாள் போட்டிகளில், பத்தாயிரம் ரன்களை நேற்று கடந்த அவர், இந்திய அளவில் சச்சின், கங்குலி, டிராவிட்டுக்குப் பிறகு இந்த மைல் கல்லை எட்டியுள்ளார். உலக அளவில் பத்தாயிரம் ரன்களை கடந்த 12 வது வீரராக அவர் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள பிராவோ, லண்டனில் தோனி மற்றும் ஹர்திக் பாண்ட் யாவை சந்தித்தார். பின்னர் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ’என் சகோதர ர்களுடன் டின்னர் சாப்பிடும் போது’ என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். மேலும், கேப்டன் கூலை (தோனி) சந்திப்பது எப்போதும் சிறப்பானது என்றும் கூறியுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement