58% பேருக்கு இன்ஜினியரிங் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை இல்லை: அதிர்ச்சி ரிப்போர்ட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடப்பு ஆண்டில் வளாகத் தேர்வு மூலம் வேலை கிடைத்த இன்ஜினியர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் இன்னும் 58 சதவீத இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வளாகத் தேர்வு மூலம் வேலை கிடைக்காமல் உள்ளதும் தெரியவந்துள்ளது.


Advertisement

கடந்த சில வருடங்களுக்கு முன் இன்ஜினிரியங் படிப்புக்கென்று தனி மரியாதை இருந்தது. படித்த முடித்தவுடன் கையில், அதிக சம்பளத்துடன் வேலை கிடைப்பதால் அதில் சேருவதற்கு பலரும் ஆர்வம் காட்டினர். ஆனால் சமீப காலமாக இன்ஜினியரிங் துறை சற்று பின்னேற்றம் கண்டுள்ளது.  எனவே பலரும் கலை மற்றும் அறிவியல் படிப்பிலும், இன்ஜினியரிங் அல்லாத மற்ற படிப்புகளிலும் தங்களது கவனத்தை செலுத்தினர்.


Advertisement

இந்நிலையில் நடப்பு ஆண்டில் வளாகத் தேர்வு மூலம் கிடைத்த இன்ஜினியர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தமாக 42 சதவீத மாணவ- மாணவியர்களுக்கு வளாகத் தேர்வு மூலம் வேலை கிடைத்துள்ளது. அதேசமயம் 58 சதவீத இன்ஜினியரிங் மாணவர்களால் வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. வளாகத் தேர்வில் 42 சதவீதம் பேருக்கு வேலை கிடைத்திருப்பது, முன் எப்போதை காட்டிலும் அதிகப்படியான சதவீதம் ஆகும். கடந்த 2012-13 ஆண்டில் 28.7 சதவீத மாணவ மாணவிகளும், 2013-14-ஆம் ஆண்டில் 31.95 சதவீதம் பேரும், 2014-15-ஆம் ஆண்டில் 32.65 சதவீதம் பேரும், 2015-16-ஆம் ஆண்டில் 37.31 சதவீதம் பேரும், 2016-17-ஆம் ஆண்டில் 38.39 சதவீதம் பேரும், 2017-2018-ஆம் ஆண்டில் 41.74 சதவீத இன்ஜினியரிங் மாணவர்களும் வளாக நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் இன்ஜினியரிங் படிப்பில் சேர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 2012-13 ஆம் ஆண்டில் 9,50,438 மாணவ மாணவிகள் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்த நிலையில் 2017- 18-ஆம் ஆண்டில் 8,75,234 மாணவ- மாணவியர்களே இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

இதனிடையே கல்லூரியில் படிக்கும் நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இன்டர்ன்ஷிப் பயிற்சிகளும் மாணவர்களுக்கு எளிதில் வேலை கிடைக்க வழிவகை செய்யும் என கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement