JUST IN

Advertisement

ஆச்சரியங்கள் இருக்கலாம்: விராத் கோலி வைக்கும் சஸ்பென்ஸ்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியில் ஆச்சரிய மாற்றங்கள் இருக்கலாம் என்று கேப்டன் விராத் கோலி கூறினார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி,  நாட்டிங்காமில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 49.5 ஓவர்களில் 268 ரன்கள் எடுத்தது. ஜோஸ் பட்லர் 53 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாக ஆடி, 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அவர து சிறப்பான பந்துவீச்சு ஆகும்.

பின்னர் ஆடிய இந்திய அணி, 40.1 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 137 ரன்களும் விராத் கோலி 74 ரன்களும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது குல்தீப் யாதவ்வுக்கு வழங்கப்பட்டது. 


Advertisement

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ‘இந்த பிட்ச், அருமையானது என்று தெரியும். மிடில் ஓவரில் மணிக்கட்டைப் பயன்படுத்தி வீசும் பந்துவீச்சாளர்கள் தந்திரமாக செயல்பட்டனர். குல்தீப், 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஒரு நாள் போட்டிகளில் இதுபோன்ற சிறந்த பந்துவீச்சை சமீபமாக பார்த்ததில்லை. அதோடு ரோகித் சர்மாவும் நீண்ட நேரம் நின்று விளையாடி ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார். மணிகட்டைப் பயன்படுத்தி வீசும் ஸ்பின்னர்கள் (குல்தீப், சேஹல்) தென்னாப்பிரிக்காவிலும் மிடில் ஒவர்களில் நன்றாக விளையாடினார்கள். அவர்கள் எங்கள் அணியின் முக்கியமான ஆயுதம். அவர்கள் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறுகிறார்கள். டெஸ்ட் போட்டியில் குல்தீப்பை சேர்ப்பது பற்றி கேட்கிறார்கள். டெஸ்ட் போட்டிக்கான அணி தேர்வு இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கிறது. அதிலும் சில ஆச்சரியங்கள் காத்திருக்கலாம். இப்போது அடுத்த இரண்டு ஒரு நாள் போட்டியையும் வெல்ல வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறோம். இங்குள்ள சீதோஷண நிலை இனிமையாக இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவும் சிறப்பாக உள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் கொஞ்சம் நீண்டதுதான். நாங்கள் எதிர்பார்த்திருக்கும் கடினமான கிரிக்கெட் எங்கள் முன் உள்ளது’ என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement