போலீசாரை குடும்பத்துடன் நேரம் செலவிட அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காவல்துறையினருக்கு ஏன் வார விடுப்பு வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறையினரின் நலன், பணி குறைப்பு, ஆர்டர் லீ தொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பினார்.


Advertisement

அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் காவலர்களுக்கு வாரந்தோறும் விடுப்பு வழங்கப்படுவதாகவும், விடுப்பில் பணிக்கு வருபவர்களுக்கு பணி நேர கூடுதல் தொகையாக 200 ரூபாய் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருபாகரன் வாரம் 200 ரூபாய் தந்தால் யாரும் விடுப்பு எடுக்க விரும்ப மாட்டார்கள் என்றார். விடுப்பில் பணிக்கு வரும் காவலருக்கு ரூ.200 வழங்குவதை மாதத்திற்கு ஒருமுறை என மாற்ற முடியுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.


Advertisement

அரசு ஊழியர்கள் வாரத்தில் 2 நாட்கள் விடுப்பு எடுக்கும் நிலையில், காவலர்களுக்கு ஏன் சுழற்சி முறையில் வார விடுப்பு அளிக்கக்கூடாது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். வாரம் ஒருநாளாவது காவல்துறையினர் குடும்பத்துடன் நேரம் செலவிட அரசு அனுமதிக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய நீதிபதி, காவல்துறை இல்லை என்றால் தடி எடுத்தவர் எல்லாம் தண்டல்காரராகி விடுவார்கள் என எச்சரித்தார். 

சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல்துறையினர், அவர்கள் வீட்டிற்கு செல்வது சிரமமாகவுள்ளதாகவும், போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமே குடும்பத்துடன் நேரம் செலவிட்டு, பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவதாகவும் அதன்காரணமாகவே பொது தேர்வுகளில் அவர்களின் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவதாகவும் கிருபாகரன் கருத்து தெரிவித்தார்.  காவல்துறையினருக்கு வாரம் ஒருநாள் விடுப்பு என்பது ஆவணங்களில் மட்டுமே உள்ளதாகவும், அதை நடைமுறைப்படுத்த அரசு என்ன முடிவெடுக்க போகிறது என ஜூலை 19ஆம் தேதி தெரிவிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement