அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த எஸ்.எம். கிருஷ்ணா

SM-Krishna--in-Congress-for-nearly-50-years--joins-BJP--praises-PM-Modi

காங்கிரஸில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம். கிருஷ்ணா, அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.


Advertisement

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா, அக்கட்சியில் 46 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். காங்கிரஸ் கட்சிக்கு இனி நான் தேவைப்பட மாட்டேன் என்று கூறி கட்சியை விட்டு வெளியேறிய அவர், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் திறமையான தலைமையில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருப்பதாக எஸ்.எம்.கிருஷ்ணா, அந்த விழாவில் பேசினார். கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பாஜகவில் இனைந்திருப்பது, சித்தராமய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த 1999-2004ம் ஆண்டுகளில் கர்நாடக முதலமைச்சராகவும், மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். நாட்டின் ஐடி முனையமாக பெங்களூருவை மாற்றியதில் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பங்கு முக்கியமானதாகும்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement