கணினி மூலம் நீட் தேர்வு: ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அனைவருக்கும் சமவாய்ப்பு என்பதை கருத்தில் கொண்டு கணினி மூலம் நீட் தேர்வு என்பதை மத்திய பாரதிய ஜனதா அரசு உடனடியாக கைவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமப்புற மாணவர்கள், அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கணினியே இல்லாத குடும்பங்களில் வாழ்பவர்கள் என சுட்டிக்காட்டியுள்ளார். அது மட்டுமின்றி அத்தகைய மாணவர்கள் கணினி பயிற்சி ஏதும் பெரிய அளவில் இல்லாதவர்கள் என அவர் கூறியுள்ளார். இதுபோன்ற இயலாமை நிறைந்த சூழ்நிலையில் கிராமப்புற மாணவர்கள் எப்படி கணினி மூலம் தேர்வு எழுத முடியும் என்ற அடிப்படை சிந்தனை கூட மத்திய அரசுக்கு வராதது மிகுந்த வேதனையளிப்பளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கணினி மூலம் நீட் தேர்வு என்பதை மத்திய அரசு உடனடியாக கைவிடவேண்டும் என்றும் ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை உடனே பெற்றுத் தரவேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement