இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி நான்கு பேரை படகுடன் சிறைபிடித்துள்ளனர்.
நேற்று காலை ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளிலிருந்து சுமார் 700 விசைப் படகுகளில் சென்ற மீனவர்கள் நள்ளிரவு கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 5-க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் 100-க்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி கடலில் வீசியுள்ளனர். கைதுக்கு அஞ்சி பலர் தப்பித்த நிலையில் சதீஸ், இருளாண்டி, தினேஷ், கோவிந்தன் ஆகிய 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் சதீஸ் என்பவரின் படகும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது.
இவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டபின் இன்று மாலை ஊர்காவல்துறை நீதிபதி முன் இவர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு தினங்களுக்குள் 16 மீனவர்களும் மூன்று படகுகளும் சிறைபிடிகப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!