‘சபாஷ் நாயுடு’ சாதியை பெருமைப்படுத்தாது: கமல் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சாதியை பெருமைப்படுத்தாது ‘சபாஷ் நாயுடு’ என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

நடிகர் கமல்ஹாசன் இயக்கி வரும் திரைப்படம் ‘சபாஷ் நாயுடு’. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரம் ஏற்கெனவே வெளியான ‘தசாவதாரம்’ படத்தில் இருந்து பெறப்பட்டது. அதில் ‘பல்ராம் நாயுடு’ என்ற கதாபாத்திரத்தையே, இதில் விரிவாக்கம் செய்துள்ளார் கமல். இந்தப் படம் 2016ஆம் ஆண்டு முறைப்படி அறிவிக்கப்பட்டது. அதில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் முதன்முறையாக அப்பா கமலுடன் இணைந்து நடிப்பதை பற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இப்படத்தின் 40 சதவீத வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் கமல்ஹாசனுக்கு ஏற்பட்ட திடீர் விபத்தால் படத்தின் பணிகள் தள்ளிப்போனது. 

இந்நிலையில் அவரிடம் சாதி இல்லை என்று கூறி உங்களின் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தவர் நீங்கள்.. ஆனால் படத்தின் தலைப்பை சாதி பெயருடன் சேர்த்து வைத்துள்ளீர்களே என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், “எம்.ஆர். ராதா அண்ணன் சாதிக்கு எதிராக பேசியவர். ஆனால் சாதி பெயரை குறித்துதான் வசனமே வைப்பார். சாதியில் தலைப்பு வைப்பதால் அதனை பெருமைப்படுத்துவதாக அர்த்தமில்லை” என்று கூறி விளக்கம் அளித்துள்ளார்.  


Advertisement


 

loading...

Advertisement

Advertisement

Advertisement