காரில் நூதனமாக கடத்தி வரப்பட்ட 300 கிலோ செம்மரங்கள் பறிமுதல்

Red-Sandals-Kidnapping-From-Andhra-to-Chennai

ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 


Advertisement

தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்று நிற்காமல் அதிவேகமாக சென்றது. அந்த காரை துரத்திச் சென்ற காவல்துறையினர் சிறிது தூரத்தில் மடக்கினர். அப்போது காரில் இருந்து வெளியேறிய 2 பேர் தப்பியோடினர். 

அவர்களை காவல்துறையினர் துரத்திப் பிடித்தனர். காரை சோதனையிட்ட போது அதில் 300 கிலோ செம்மரங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து செம்மரங்களை கடத்தி வந்ததாக ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ்பாபு மற்றும் பாலச்சந்தரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement