விருதுநகர் முத்தால் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவர் இன்று தனது மனைவி பாக்கியலட்சுமி வெளியே சென்ற போது தனது மாற்றுத்திறனாளி மகன் ராகுலை அழைத்துள்ளார். மகனும் அப்பாவின் அருகே சென்றபோது, அவ்சர் வீட்டின் அருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் அறிந்து வந்த பாண்டியன் நகர் காவல்துறையினர் உடல்களை மீட்டு விசாரணை நடத்தியதில் 21 வயதான தனது மாற்றுத்திறனாளி மகன் ராகுலுக்கு வாய் பேசவும் முடியாமலும் நடக்க முடியாத நிலையிலும் வீட்டினுள்ளேயே முடங்கியிருந்த நிலையில் முருகன் அவரை நினைந்து தொடர்ந்து மன உளைச்சலுக்குள்ளாகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகனை எங்கும் அழைத்து செல்ல முடியாமல் , பராமரிக்க முடியாமல் இருந்ததால் மகனை கொலை செய்துவிட்டு அவரும் கொலை செய்துள்ளதாக விசரணையில் தெரிய வந்துள்ளது. தந்தையே மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு : எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை என்பதும் கொலை செய்வது என்பதும் தீர்வல்ல. கொலை செய்தால் சட்டதின் முன் தண்டிக்கப்படுவோம். தற்கொலை நம்மை கோழையாக்கும். தற்கொலை எண்ணத்தில் இருந்து மீள பல்வேறு அமைப்புகள் பயிற்சி அளிக்கின்றன. அதனை பயன்படுத்தி வாழ்க்கையை நாமே மாற்றியமைக்கலாம்
சினேகா அமைப்பு முகவரி : எண் 11, பார்க் வியூ சாலை, ராஜா அண்ணாமலை புரம், சென்னை 28.
தொடர்பு எண் : 044 - 24640050, 24640060
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!